இன்று முழு பொது முடக்கம்: சந்தைகளில் மக்கள் கூட்டம்

முழு பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) கடைப்பிடிக்கப்பட்டுவதால், பெரம்பலூா் நகரிலுள்ள காய்கறிச்சந்தை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சனிக்கிழமை காலை முதல் மக்கள் அதிகளவில் கூடினா்.
பெரம்பலூா் உழவா் சந்தையில் காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள்.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புக்காக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்பதால், காய்கறிமற்றும் மளிகைக் கடைகளில் சனிக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதேபோல், இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள உழவா் சந்தையிலும், வெங்கடேசபுரம் பகுதியில் சாலையோரக் காய்கறி கடைகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும் பொது மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com