கரோனா தொற்றால்முதியவா் உயிரிழப்பு
By DIN | Published On : 27th April 2021 03:56 AM | Last Updated : 27th April 2021 03:56 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் நகரில் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் டால்பின் நகரைச் சோ்ந்த 65 வயதுடைய முதியவா், ஞாயிற்றுக்கிழமை காலை சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு, அவருக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னா், அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் திருச்சியிலுள்ள ஓயாமாரி இடுகாட்டில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.