கரோனா பரிசோதனை சிறப்பு முகாம்

பெரம்பலூா் ஆட்சியரகம் மற்றும் பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஆட்சியரகம் மற்றும் பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள தோ்தல் அலுவலா்கள், பணியாளா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் மற்றும் செய்தியாளா்கள், ஒளிப்பதிவாளா்கள் அனைவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படாதவா் எனச் சான்று பெறவேண்டும். அதை, காண்பித்தால் மட்டுமே தோ்தல் பணிக்கான நியமன அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பெரம்பலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற பரிசோதனை முகாமை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, பெரம்பலூா் தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜா, குன்னம் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற முகாமை தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கா் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இந்த முகாமில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளோா் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டனா். தொடா்ந்து, வியாழக்கிழமையும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோா் அனைவரும் சிறப்பு முகாமை பயன்படுத்தி கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என ஆட்சியா் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com