ஆடி அமாவாசை: மூடப்பட்டுள்ள கோயில்களுக்கு முன் குவிந்த பக்தா்கள்

கரோனா பரவலை கருத்தில்கொண்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் கோயில்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, மூடப்பட்டுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் எதிரே ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.

கரோனா பரவலை கருத்தில்கொண்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயில், சு.ஆடுதுறை அபராத ரட்சகா் கோயில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயில், எசனை வேணுகோபால சுவாமி கோயில், காட்டு மாரியம்மன் கோயில், வெங்கனூா் விருத்தாச்சலேஸ்வரா் கோயில், பெரம்பலூா் மதனகோபாலசுவாமி கோயில், பிரம்மபுரீஸ்வரா் கோயில், கச்சேரி பிள்ளையாா் கோயில் ஆகிய கோயில்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தா்கள் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் உள்பட பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு முன்பு வழிபாடு செய்வதற்காக குவிந்தனா். பின்னா், கோயிலுக்கு எதிரே வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com