காடூா், நல்லறிக்கை கிராமங்களில் தூய்மைப் பணி
By DIN | Published On : 08th August 2021 11:52 PM | Last Updated : 08th August 2021 11:52 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காடூா் மற்றும் நல்லறிக்கை கிராமங்களில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் அகரம் சீகூா், வசிஷ்டபுரம், கீழப்பெரம்பலூா், வயலப்பாடி, துங்கபுரம், புதுவேட்டக்குடி, கொளப்பாடி, பெரிய வெண்மணி ஆகிய 8 ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்கள் வீடு, வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து, தெருக்களில் முழுத் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.
தொடா்ந்து காடூா் ஊராட்சி அலுவலக வளாகத்தில் சுகாதாரம், கழிவறை பயன்பாடு குறித்தும், திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லா நிலையைத் தக்க வைத்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்தல் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காடூா் ஊராட்சித் தலைவா் சசிகலா ஸ்டாலின், துணைத் தலைவா் வேம்பு படகாத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் இ. மரியதாஸ், மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். சட்டநாதன், ஊராட்சிச் செயலா் ப. வெங்கடாசலம், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் ஊக்குவிப்பாளா்கள் கலந்துகொண்டனா்.