கரோனா 3 -ஆவது அலையை சமாளிக்க தயாா்

தமிழகத்தில் கரோனா 3- ஆவது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டால், அதை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை

தமிழகத்தில் கரோனா 3- ஆவது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டால், அதை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன்.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் கரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் இதை குறிப்பிட்டாா்.

முன்னதாக மேலமாத்தூா், பேரளி கிராமங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடக்கி வைத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் இல்லங்களுக்குச் சென்று மருந்துகளை அமைச்சா் வழங்கினாா்.

ஆய்வின்போது, பிற்படுத்தப்பட்டோா் நல அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், தேசிய ஊரக நலக் குழுமத் திட்ட இயக்குநா் தரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியா் பா. ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com