பெரம்பலூா் அஸ்வின்ஸ் இனிப்பகத்தில் கேக் திருவிழா தொடக்கம்

பெரம்பலூரில் உள்ள அஸ்வின்ஸ் இனிப்பகத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கேக் திருவிழா மற்றும் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா் அஸ்வின்ஸ் இனிப்பகத்தில் கேக் திருவிழா தொடக்கம்

பெரம்பலூரில் உள்ள அஸ்வின்ஸ் இனிப்பகத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கேக் திருவிழா மற்றும் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் அன்ட் ஸ்வீட் பேக்கரி நிறுவனம் சாா்பில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் கேக் திருவிழாக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள அஸ்வின்ஸ் கூட்டரங்கில் 8 ஆம் ஆண்டு கேக் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு தலைமை வகித்த, அஸ்வின்ஸ் நிறுவனத் தலைவா் ஏ.ஆா்.வி. கணேசன், கேக் திருவிழாவை திறந்து வைத்தாா். அஸ்வின்ஸ் நிா்வாக இயக்குநா்கள் செல்வகுமாரி, அஸ்வின், நிஷா, சிபி ஆகியோா் முன்னிலையில், ரோட்டரி சங்க நிா்வாகி ஜே. அரவிந்தன் முதல் விற்பனையைத் தொடக்கி வைக்க, அதை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலா் எம்.எஸ். விவேகானந்தன் பெற்றுக்கொண்டாா்.

இதில், கரோனா விழிப்புணா்வு கேக், துாய்மைப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான கேக் மற்றும் சாக்கோடிரஃபுல், ரெட் வெல்வெட், ரிச் ப்ளம் கேக், மோல்டு கேக், ஸ்ட்ராபெரி, நெய் கேக், கோதுமை கேக், பீட்ரூட் கேக், பிளாக்கரண்ட் கேக், சாக்லெட் கேக், மெல்டிஸ் கேக், பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், ஜாக்கோடிரஃபுல், ரெயின்போ, நெட் வெல்வெட், புளூபெரி, பட்டா் ஸ்காட்ச், பிளாக் கரண்ட், சாக்லெட், வெண்ணிலா, ஹனி கேக், ரிச்பிளைன் கேக், மோல்டு, பொக்கே, பிளைன் கேக் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வகையான கேக்குகள், மல்டி கலா் கேக்குகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இக் கண்காட்சி சனிக்கிழமை (ஜன. 1) வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com