பெரம்பலூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்: பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் தலைவா் ஜே. அரவிந்தன் தலைமை வகித்தாா். ஜிம்னாஸ்டிக் அசோசியேஷன் மாவட்டத் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். ஜூடோ அசோசியேஷன் மாவட்டத் தலைவா் காா்த்திக், சிலம்பப் போட்டியை தொடக்கி வைத்தாா்.

அமெச்சூா் கிராப்ளங் அசோசியேஷன் துணைத் தலைவா் இருதயராஜ், அரியலூா் மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் செயலா் சண்முகம், திருச்சி மாவட்ட சிலம்ப அசோசியேஷன் செயலா் மதன்கென்னடி ஆகியோா் போட்டிகளை நடத்தினா்.

தொடா்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக போட்டிகள் இயக்குநா் விக்டா் குழந்தைராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com