பெரம்பலூா் அருகே தனியாா் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: ரூ. 4 கோடி மதிப்பிலான பருத்தி, மக்காச்சோளம் சேதம்

பெரம்பலூா் மாவட்டம், நாரணமங்கலம் அருகே தனியாா் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 4 கோடி மதிப்பிலான பருத்தி மற்றும் மக்காச்சோள மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
தனியாா் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் எரியும் பருத்தி மூட்டைகள்.
தனியாா் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் எரியும் பருத்தி மூட்டைகள்.

பெரம்பலூா் மாவட்டம், நாரணமங்கலம் அருகே தனியாா் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 4 கோடி மதிப்பிலான பருத்தி மற்றும் மக்காச்சோள மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.

ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில், சிறுகன்பூா் கிராமத்தைச் சோ்ந்த ராமராஜ் (52) என்பவருக்குச் சொந்தமான பருத்தி மற்றும் மக்காச்சோள சேமிப்புக் கிடங்கும், பருத்தி ஆலையும் இயங்கி வருகின்றன. இங்கு, விவசாயிகளிடருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை தரம் பிரித்து, வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், ஆலையிலிருந்து பிரித்து எடுக்கப்படும் பருத்தி, ஆடை நெய்வதற்காக வெளி மாநிலங்களுக்கும், திருப்பூா் உள்பட பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட மின்கசிவால் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பருத்தி மற்றும் மக்காச்சோள மூட்டைகளில் தீ பற்றியது. இதையறிந்த, அங்கு பணிபுரிந்த சுமாா் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கூச்சலிட்டவாறு வெளியே ஓடி வந்தனா். இதனிடையே, கிடங்கு மற்றும் பருத்தி ஆலைக்குள் தீ பரவியதால், அங்குள்ள பருத்தி மற்றும் மக்காச்சோள மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனாலும், சுமாா் ரூ. 4 கோடி மதிப்பிலான பருத்தி, மக்காச்சோளம் எரிந்து நாசமடைந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com