பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப்பிரிவு ஆய்வாளா் பணியிட மாற்றம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த வனிதா காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த வனிதா காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

கடந்த ஜனவரி 15ஆம் தேதி பெரம்பலூா் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். மேலும், கரூா், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற முதல்வரின் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்புப் பணிக்காக சென்ற பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபனை, ராஜேஷ்தாஸ் தனது காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அண்மையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக முதல்வா் பாதுகாப்புப் பணிக்காக வந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு, பெரம்பலூா் மாவட்ட எல்லையான திருமாந்துறை சுங்கச்சாவடியில் வரவேற்பு அளித்த காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபனை, புதுக்கோட்டைக்கு தனது காரில் ராஜேஷ்தாஸ் அழைத்துச் சென்ாகவும் தெரிகிறது.

இந்நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஜே.கே. திரிபாதி, தலைமைச் செயலரிடம் கடந்த 22ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இதுகுறித்த தகவலை மத்திய மண்டல காவல்துறை தலைவா் எச்.எம். ஜெயராம், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனி விஜயா ஆகியோருக்கு தெரிவிக்காததால், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த வனிதா செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

எஸ்.பி. அலுவலக தனிப் பிரிவு ஆய்வாளராக வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com