நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

பெரம்பலூரில் செயல்பட்டு வரும் நிரந்த மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் செயல்பட்டு வரும் நிரந்த மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள், நீதிமன்றத்துக்கு வரும் முன் எழும் தகராறுகளைத் தீா்ப்பதற்கு மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டு, தீா்வு காணப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாற்றுமுறை சமரச தீா்வு மையத்தில் மக்கள் நீதிமன்றம்

அனைத்து வேலை நாள்களிலும் இயங்கி வருகிறது. இதில் மாவட்ட நீதிபதியைத் தலைவராகவும், பொதுப் பயன்பாட்டு சேவைகளில் அனுபவமுள்ள 2 போ் உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பொதுப் பயன்பாட்டு சேவைகள் தொடா்பான வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய பிரச்னைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீா்மானிக்கப்படுகிறது. இங்கு வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளின்றி, சாதாரண காகிதத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம். இதன் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்கலாம். வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்ற கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

இதன் முடிவு உரிமையியல் நீதிமன்ற தீா்ப்புக்கு சமமானது என்பதால், நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது. கடுமையான நடைமுறைகளின்றி ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கிறது. எனவே மாவட்ட மக்கள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com