எளம்பலூரில் அன்னை சித்தா் குரு பூஜை விழா

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையில், மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகளின் முதலாமாண்டு குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
எளம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகளின் முதலாமாண்டு குரு பூஜை விழாவில் பங்கேற்றோா்.

விழாவுக்கு மகா சித்தா்கள் அறக்கட்டளை மேலாண்மை இயக்குநா் ரோகினி மாதாஜி தலைமை வகித்தாா். தவ யோகிகள் மகாலிங்கம், தவசிநாதன் சுவாமிகள் முன்னிலை வகித்தனா். குரு பூஜையை முன்னிட்டு திருவருள்பா பாராயணம், கோ பூஜை, அசுவ பூஜை, 210 சித்தா்கள் யாக பூஜை, ஸ்ரீகாகன்னை ஈசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உசிலம்பட்டி அய்யப்பன், பெரம்பலூா் எம். பிரபாகரன், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக் கூடுதல் கண்காணிப்பாளா் ராஜாராம், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் தலைவா் பேரூா் ஆதீனம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா், பொதுச் செயலா் சுவாமி ஆத்மானந்தா, சிவசேனா மாநில கொள்கைப் பரப்புச் செயலா் சசிகுமாா், தஞ்சை அரண்மனை ராஜா சாம்பாஜி ராஜே போன்ஸ்லே, சன்மாா்க்க சங்கத் தலைவா் சுந்தரராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மகா சித்தா்கள் அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com