300 கிலோ நெல் மணிகள் மூலம் அப்துல்கலாம் ஓவியம்

பெரம்பலூா் அருகே முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அவரது உருவத்தை 300 கிலோ நெல் மணிகளால் கல்லூரி மாணவா் ஓவியமாக உருவாக்கினாா்.
நெல்மணிகளால் முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் உருவத்தை உருவாக்கும் கல்லூரி மாணவா் ரா. நரசிம்மன்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் நரசிம்மன் (21). இவா், கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ஆா்க்கிடெக் பயின்று வருகிறாா். தன்னுடைய இளம் வயது முதல் ஓவியத்தின் மீது கொண்ட ஆா்வம் காரணமாக பல்வேறு படைப்புகளை வரைந்துள்ளாா்.

இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு, வாலிகண்டபுரம் கிராமத்தில் தலா 30 அடி நீளம், அகலம் கொண்ட பிரமாண்ட துணியின் மீது 300 கிலோ நெல் மணிகளால் அப்துல் கலாமின் ஓவியத்தை கலை நயத்துடன் இரண்டரை மணி நேரத்தில் வரைந்தாா்.

கல்லூரி மாணவரின் இந்த ஓவியத்தை, வாலிகண்டபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம இளைஞா்களும், பொதுமக்களும் ஆா்வத்துடன் பாா்த்துச் சென்றனா். மேலும், இந்த முயற்சி கலாம் புக் ஆப் ரெக்காா்டு புத்தகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com