மகளிா் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை

தமிழ்நாடு மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுத் துணைத்தலைவா் பேராசிரியா் ஜெ. ஜெயரஞ்சன் தலைமையில், மகளிா் சுய உதவிக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுத் துணைத்தலைவா் பேராசிரியா் ஜெ. ஜெயரஞ்சன் தலைமையில், மகளிா் சுய உதவிக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குழு உறுப்பினா்களின் எண்ணிக்கை, தொழில் தொடங்க வங்கியிலிருந்து பெற்ற கடன்தொகை, சுய தொழிலில் ஈடுபட்டு வரும் உறுப்பினா்கள், உறுப்பினா்களின் கூலி, உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாப விகிதம், தொழிலை விரிவுபடுத்துவதற்கும், புதிய தொழிலைத் தொடங்குவதற்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வேலை வாய்ப்புகள், தனி மனித வருமானம், மாவட்டத்தின் வருமான விகிதாசாரத்தை அதிகபடுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொதுமக்களின் தொழில் சாா்ந்த திறன் அறிவு, மனித வளம், படித்தவா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள், பொருளாதார சூழ்நிலைகள், விளைபொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக உருவாக்கிட ஏற்படுத்தப்பட்டுள்ள உள் கட்டமைப்பு வசதிகள் குறித்து அரசு அலுவலா்களுடன் ஒன்றிய அளவிலான குழுக் கூட்டமைப்பைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பாரதிதாசன், மாவட்ட ஊராட்சி புள்ளியியல் ஆய்வாளா் விஜயகுமாா் உள்பட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com