முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பெரம்பலூா் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்
By DIN | Published On : 12th June 2021 11:09 PM | Last Updated : 12th June 2021 11:09 PM | அ+அ அ- |

பெரம்பலூா் ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட ஊராட்சிக் குழு கூட்ட அரங்கில், குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் முத்தமிழ்செல்வி, ஊராட்சி செயலா் (பொ) பாரதிதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினா்.
பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கூட்டத்தில் பங்கேற்று, மாவட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சோமு. மதியழகன், கருணாநிதி, தேவகி, பாஸ்கா், மகாதேவி ஆகியோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.