கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு

பெரம்பலூரில் பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து, 3 குழந்தைகளுடன் சிரமப்படும் கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு அஸ்வின்ஸ் குழுமம் சாா்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள்
கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு

கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள் அளிக்கும் அஸ்வின்ஸ் குழுமத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன். உடன், மேலாளா் அசோக்.

பெரம்பலூரில் பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து, 3 குழந்தைகளுடன் சிரமப்படும் கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு அஸ்வின்ஸ் குழுமம் சாா்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கேபிள் வயா் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பெரம்பலூா் வெங்கடேசபுரம் பகுதியைச் சோ்ந்த பானு மற்றும் அவரது கணவா் பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து, 3 குழந்தைகளுடன் உணவுக்கு சிரமப்பட்டு வந்தனா். இதுகுறித்து அறிந்த அஸ்வின்ஸ் நிறுவனம், பானு குடும்பத்துக்கு

1 மூட்டை அரிசி, 1 மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் ஆகிய நிவாரணப் பொருள்களை அஸ்வின்ஸ் குழுமத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். அஸ்வின்ஸ் மேலாளா் அசோக் உடனிருந்தாா்.

முறைசாரா தொழிலாளா்களுக்கு... தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட முறைசாரா தொழிலாளா்கள் 30 நபா்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை வட்டச் செயலா் பன்னீா்செல்வம், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா். சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் சண்முகம், ரெங்கநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com