சித்த மருத்துவ உள் நோயாளிகள் சிகிச்சை மையம் தொடங்க வலியுறுத்தல்

பெரம்பலூரில் சித்த மருத்துவ முறையிலான கரோனா உள்நோயாளிகள் சிகிச்சை மையம் தொடங்கக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூரில் சித்த மருத்துவ முறையிலான கரோனா உள்நோயாளிகள் சிகிச்சை மையம் தொடங்கக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியாவிடம் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் அளித்த மனு:

கரோனா முதல் அலையின்போது பெரம்பலூா் மாவட்டம், கவுள்பாளையத்திலுள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் கரோனா உள் நோயாளிகள் சித்த மருத்துவச் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

இங்கு பலா் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினா். இறப்பு விகிதமும் இல்லை.

திருச்சியில் அண்மையில் தொடங்கப்பட்ட கரோனா உள்நோயாளிகள் சித்த மருத்துவச் சிறப்பு சிகிச்சை மையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக, அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்த பலா் கூறுகின்றனா்.

இதுபோல, பெரம்பலூா் மாவட்டத்திலும் கரோனா உள் நோயாளிகள் சித்த மருத்துவச் சிறப்பு சிகிச்சை மையத்தை உடனே தொடங்க வேண்டும். இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பக்க விளைவுகளற்ற, நமது பாரம்பரிய முறையிலான சித்த மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com