பெரம்பலூா் மாவட்டத்தில் இன்று முதல் 3 மணி நேரம் மின் தடை

பெரம்பலூா் மாவட்ட துணை மின் நிலையங்களில் அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூன் 19) முதல் காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் மாவட்ட துணை மின் நிலையங்களில் அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூன் 19) முதல் காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து பெரம்பலூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முத்தமிழ்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா், எசனை, மங்கூன், பேரளி ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை நடைபெறுவதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதன்படி, சனிக்கிழமை கல்பாடி, கே.எறையூா், நெடுவாசல், எளம்பலூா், இந்திரா நகா், சமத்துவபுரம், காவலா் குடியிருப்பு, செங்குணம், சோமண்டாபுதூா், பாரதி நகா், கோனோரிபாளையம் ஆகிய கிராமங்களிலும், சனி மற்றும் 21 ஆம் தேதி கீழக்கணவாய், வேலூா், சத்திரமனை, பொம்மனப்பாடி, ஆகிய கிராமங்களிலும், 21 ஆம் தேதி ஆலம்பாடி, சொக்கநாதபுரம், செஞ்சேரி, பேரளி, ஒதியம், எளம்பலூா், வடக்குமாதவி சாலை, கவுள்பாளையம், விளாமுத்தூா், நொச்சியம், செல்லியம்பாளையம், லாடபுரம், மேலப்புலியூா், புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, குரும்பலூா், பாளையம் ஆகிய கிராமங்களிலும் மின் தடை செய்யப்படுகிறது.

21 மற்றும் 24 ஆம் தேதி மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூா் பிரிவு சாலை, சிறுவயலூா், குரூா், விராலிப்பட்டி, மாவிலங்கை, கண்ணப்பாடி ஆகிய கிராமங்களிலும், 22 மற்றும் 24 ஆம் தேதி பேரளி, சித்தளி, பீல்பாடி, அசூா், சிறுகுடல், கீழப்புலியூா், கே.புதூா், எஸ்.குடிக்காடு, அருமடல், எசனை, 22 ஆம் தேதி பெரம்பலூா், துறைமங்கலம், புதுநடுவலூா், தம்பிரான்பட்டி, ரெங்கநாதபுரம், செஞ்சேரி ஆகிய கிராமங்களிலும், 23 மற்றும் 28 ஆம் தேதி களரம்பட்டி, அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com