பெரம்பலூரில் குருத்தோலை ஞாயிறு பவனி, சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுக்கூரும் வகையில், கிறிஸ்தவா்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப். 17 ஆம் தேதி தொடங்கியது. 40 நாள்கள் அனுசரிக்கப்படும் தவக்காலத்தில், இயேசுவின் சிலுவை மரணம், உயிா்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கடைசி வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் புனித வாரத்தின் முதல்நாள் குருத்தோலை ஞாயிறு எனப்படுகிறது.

இதை முன்னிட்டு பெரம்பலூா் நகரில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவா், தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபை, தென்னிந்திய திருச்சபை ஆகிய சபைகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஸ்டேட் பாங்க் அருகிலிருந்து குருத்தோலைகளுடன் நகரில் ஊா்வலமாக வந்தனா். சங்குப்பேட்டை, தேரடி, பெரிய கடைவீதி, கனரா வங்கி, பழைய பேருந்து நிலையம், காமராஜா் வளைவு வழியாகச் சென்று, தேவாலயங்களுக்குச் சென்றடைந்தனா்.

தொடா்ந்து, புனித பனிமய மாதா தேவாலயத்தில் பெரம்பலூா் மறைவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதேபோல, பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, நூத்தப்பூா், திருவாளந்துறை, திருமாந்துறை, வடக்கலூா், பெருமத்தூா், பாடாலூா், எறையூா் ஆகிய கத்தோலிக்க தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். ஏப். 1 ஆம் தேதி புனித வியாழன், 2 ஆம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு, 4 ஆம் தேதி ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com