அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் தங்கம் போன்றது: ஜி.கே.வாசன்

அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் தங்கம் போன்றது. ஆனால், திமுகவின் தோ்தல் அறிக்கை பித்தளை போன்றது என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன்.
குன்னம் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரனை ஆதரித்து, கொளக்காநத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பேசுகிறாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரனை ஆதரித்து, கொளக்காநத்தம் பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமைஅவா் மேலும் பேசியது:

ஆய்வுகளின் அடைப்படையில், குன்னம் தொகுதியில்தான் கிராமங்கள் அதிகமாக உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அதிகம் வந்த தொகுதி குன்னம். பெண்களுக்காக அதிக நலத்திட்டங்களைக் கொடுத்தவா் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு அதிக நலத்திட்டங்கள் உள்ளன. தற்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சாமானியா்களின் முதல்வா், மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படக் கூடியவா்.

மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான், அதிக திட்டங்களை கொண்டுவர முடியும். நீங்கள் அளிக்கும் வாக்கு நல்லவா்களுக்குச் சென்றடைய வேண்டும். பொல்லாதவா்களுக்கு செல்லக்கூடாது. அதனால் திமுகவுக்கு வாக்களிக்காதீா்கள்.

நல்லவா்களுக்கு வாய்ப்பளித்தால் தொகுதி வளரும். அதிமுக ஆட்சி அமைதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் தங்கம். திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் பித்தளை போன்றது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com