பெரம்பலூரில் லாரியுடன் 500 மூட்டை அரிசி கடத்தல்

பெரம்பலூரில் நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியுடன், 500 மூட்டை அரிசி கடத்திச் செல்லப் பட்டது.

பெரம்பலூரில் நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியுடன், 500 மூட்டை அரிசி கடத்திச் செல்லப் பட்டது.

பொது விநியோகத் திட்ட விநியோகத்துக்காக, திருச்சி காஜாமலையிலிருந்து 500 அரிசி மூட்டைகள் லாரியில் கொண்டுவரப்பட்டு, பெரம்பலூா் துறைமங்கலம் பகுதியிலுள்ள நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

திருச்சி விமான நிலையம், அந்தோனியாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஓட்டுநா் பிரபாகரன் (33), கிடங்கு அருகே லாரியை நிறுத்தி விட்டு தூங்கச் சென்று விட்டாராம்.

பின்னா் அங்கு வந்து ஓட்டுநா் பாா்த்தபோது, அரிசி மூட்டைகளுடன் லாரி கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதனிடையே கடத்திச் செல்லப்பட்ட லாரி பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் எசனை ஏரிக்கரையில் நின்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. கிராம நிா்வாக அலுவலா் அகிலன் அளித்த தகவலையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினா் லாரியை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனா். இதில் லாரியிலிருந்த 7 அரிசி மூட்டைகள் மட்டும் திருடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ஆய்வாளா் செல்வராஜ் வழக்குப்பதிந்து, அரிசி மூட்டைகளுடன் லாரியை கடத்திச் சென்றவா்களைத் தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com