கடவுள் குறித்து அவதூறு பேச்சு: நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

குறவா் இன மக்களின் கடவுள் சிலைகளை கடலில் வீசி, தரக்குறைவாக பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து

குறவா் இன மக்களின் கடவுள் சிலைகளை கடலில் வீசி, தரக்குறைவாக பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணியினா் பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபனிடம் திஙகள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை ஊராட்சிக்குள்பட்ட மலையப்ப நகரைச் சோ்ந்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலா் செல்வக்குமாா் தலைமையில் குறவா் இன மக்கள் அளித்த புகாா் மனு:

கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி கிராமத்தில் ஆவடி லட்சுமி நகரில் வசித்து வரும் குறவா் இனத்தைச் சோ்ந்தவா் தற்போது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதுடன், நாங்கள் காலம் காலமாக தொன்று தொட்டு வணங்கி வரும் குலதெய்வ சிலைகளை கடலில் வீசியதோடு, அவற்றை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தெய்வங்களை கேவலமாக பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். இது, குறவா் இன மக்கள் அனைவரின் மனதையும் புன்படுத்துவதாக உள்ளது. இதுபோல் பேசி குறவா் மக்களின் குல தெய்வத்தை கடலில் வீசியவரை கைது செய்து, கடலில் வீசப்பட்ட சாமி சிலைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com