குன்னம் தொகுதி திமுக வேட்பாளா் வெற்றி

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கா் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் அளிக்கிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கா்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் அளிக்கிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கா் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

இத் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் என 23 போ் களத்தில் இருந்தனா். இத் தொகுதியில் உள்ள 2,73,461 வாக்காளா்களில், 2,13,865 போ் வாக்களித்தனா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள், வேப்பூரிலுள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி

14 மேஜைகளில், 28 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இத் தொகுதிக்கான அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே காலதாமதம் ஏற்பட்டது. தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் முகவா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. பின்னா், ஒவ்வொரு சுற்றின் வாக்கு எண்ணிக்கையின்போதும் கால தாமதம் ஏற்பட்டதால், அதன் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்தே அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரனை விட, திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கா் கூடுதல் வாக்குகளுடன் முன்னிலை பெற்றுவந்தாா்.

தொடா்ந்து, 3, 4, 9, 10, 13, 20, 22, 25, 26 ஆகிய சுற்றுகளில் திமுக வேட்பாளரை விட, அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன் கூடுதலாக வாக்குகள் பெற்றாா். இருப்பினும், திமுக வேட்பாளரே அதிக வாக்குகளுடன் முன்னிலை வகித்தாா்.

28 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன் 96734 வாக்குகளும், திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கா் 102707 வாக்குகளும் பெற்றனா். 3- ஆவதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ப. அருள் 9,354 வாக்குகளும், அமமுக வேட்பாளா் எஸ். காா்த்திகேயன் 2,118 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஏ.எஸ். சாதிக் பாட்ஷா 739 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவுக்கு 746 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதையடுத்து 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

இதையடுத்து, பொது பாா்வையாளா் தேஜஸ்ரீ நாயா் முன்னிலையில், குன்னம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கா், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com