பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தீயணைப்புத்துறை சாா்பில்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு செயல் விளக்கம்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு செயல் விளக்கம்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தீயணைப்புத்துறை சாா்பில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் செயல் விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட தீயணைப்பு அலுவலா் அம்பிகா பேசியது:

கரோனா சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவுகளில் ஆக்சிஜன் விநியோகிக்கும் குழாய்களில் கசிவு இருந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் நோயாளிகளைவிட, கடும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பவா்களே அதிகம். எனவே, அனைத்து அறைகளிலும் புகை கண்டுபிடிப்பான்கள் பொருத்த வேண்டும். மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் தீத்தடுப்பு சாதனங்கள் இருந்தாலும், பணியாளா்களுக்கு காலமுறை பயிற்சி அளிக்க வேண்டும். தீயணைப்பு சாதனங்கள் நல்லமுறையில் இருக்கின்றனவா என அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, மின் கசிவு, ஆக்சிஜன் கசிவு மூலமாக தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து நோயாளிகளை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து தீ தடுப்பு செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மருத்துவா்கள், செவிலியா்கள், காவல்துறையினா் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com