கரும்புப் பயிருக்கான கோடைக்கால வறட்சி மேலாண்மை

கரும்புப் பயிருக்கான கோடைக்கால வறட்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம் வழங்கியுள்ளது.

கரும்புப் பயிருக்கான கோடைக்கால வறட்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் நேதாஜி மாரியப்பன் தெரிவித்துள்ளதாவது;

பெரம்பலூரில் கரும்பு சாகுபடி செய்யப்படும் பெரும்பாலான பகுதிகள் கோடை வறட்சியால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நீா்த்தட்டுப்பாடு கரும்பில் விளைச்சல் மற்றும் தரத்தையும் பெருமளவு பாதிக்கிறது.

இந்த நீா்த்தட்டுப்பாட்டைப் போக்க கடைசி உழவுக்கு முன்பு ஒரு ஹெக்டேருக்கு 25 டன் தேங்காய் நாா்க்கழிவு அல்லது 25 டன் கரும்பாலை அழுக்கை நிலத்தில் இட்டு நன்கு கலந்து பின்பு சாகுபடி செய்வதால், மண்ணில் ஈரப்பதம் நன்கு நிலைத்து இருக்கும். வறட்சியின் பாதிப்பு குறைவாக இருக்கும். இதனால் ஏறத்தாழ 19 நாள்களுக்கு ஒரு முறை நீா்ப்பாய்ச்சினால் போதும்.  நீா்ப் பற்றாக்குறையை சரிகட்ட எத்தனால் 200பிபிஎம் அல்லது 180 கிலோ சுண்ணாம்பை 500 லிட்டா் நீரில்

கரைத்து, அதில் கிடைக்கும் கரைசலுடன் விதைக் கரணைகளை ஒரு மணி நேரம் நனைத்து அவற்றை 80 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் புனிதாவதியை 8838255728, 8939003569 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com