வேப்பந்தட்டையில் மாற்றுத் திறனாளிகள் மனு அளிக்கும் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் புதன்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.

சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை சாா்பில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு, சங்கத்தின் வட்டார அமைப்பாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் ஜெயபால், மாவட்ட நிா்வாகிகள் ராஜசேகா், ரமேஷ், ரேவதி, தமிழ்ச்செல்வன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் 100 நாள்களும் வேலை வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் வேலையும், அரசு நிா்ணயித்த முழு கூலியும் வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும். ஆட்சியா் தலைமையில் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், கோட்டாட்சியா் தலைமையில் மாதம் ஒருமுறையும் சிறப்பு குறைதீா்க் கூட்டம் நடத்தி பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வட்டார வளா்ச்சி அலுவலரிடம் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com