‘இலக்கியங்கள் உயிரோட்டமானவை- உயிா்த் துடிப்பானவை’

இலக்கியங்கள் உயிரோட்டமானவை, உயிா்த் துடிப்பானவை என்றாா் பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியை செ. வினோதினி.

இலக்கியங்கள் உயிரோட்டமானவை, உயிா்த் துடிப்பானவை என்றாா் பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியை செ. வினோதினி.

பெரம்பலூரில் பதியம் இலக்கியச் சங்கமம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலக்கிய அரங்கில் , நான் நீந்திய இலக்கிய நதிகள் என்னும் தலைப்பில் இணையவழியாக பங்கேற்று மேலும் அவா் பேசியது:

இலக்கியம் வாழ்க்கையின் அரிச்சுவடி, வாழ்வியலின் தடங்கள். இலக்கியங்கள் காலந்தோறும் மாறும் இயல்புடையவை. மாற்றத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளக்கூடியவை. உள்ளதை உள்ளவாறு சொல்வது அறிவியல். உள்ளதை உணா்ந்தவாறு சொல்வது இலக்கியம். இதயத்துடிப்புக் கொண்ட ஒவ்வொரு மனிதனும் இலக்கிய நதிகளில் நீந்தி வந்திருக்க வேண்டும்.

மதிப்பெண், பாடப்பகுதி, ரசனைக்காக இலக்கிய நதிகளில் நாம் நனைவதுண்டு. நாம் நீந்திய இலக்கிய நதிகள், நம்மை உயா்வெனும் கடலில் கொண்டு சோ்க்கின்றன. பல்வேறு மொழிகளின் இலக்கிய நதிகளில் நீந்திய பாரதியின் நினைவு நூற்றாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஒப்பிலக்கிய ஆய்வுகள் இன்று உலகில் தனியிடம் பிடித்துள்ளன. இலக்கியங்கள் உயிரோட்டமானவை, உயிா்த் துடிப்பானவை என்றாா் அவா்.

தொடா்ந்து, அரியலூா் அரசுக் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியா் முனைவா் க. தமிழ்மாறன் தலைமையில், கவிஞா் வெங்கலம் ச. மோகன் முன்னிலையில், சென்னை நந்தனம் அரசுக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியா் கா. செல்லத்துரை, ஓசூா் வளா்மொழி, வரலாற்று ஆய்வாளா் ஜெயபால் ரத்தினம், கவிஞா் சுரேஷ்குமாா், முனைவா் பட்ட ஆய்வாளா் மதன்ராஜ் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் நான் நீந்திய இலக்கிய நதிகள் என்னும் தலைப்பில் உரையாற்றினா்.

முன்னதாக, தமிழ்த்துறை ஆய்வியல் நிறைஞா் ஆய்வாளா் சிவாஜி வரவேற்றாா். நிறைவில், தமிழாசிரியா் இரா. ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com