‘அனைத்து சட்டங்களையும் அறிந்து விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்’

மாணவா்கள் அனைத்து சட்டங்களையும் அறிந்து, விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றாா் பெரம்பலூா் மாவட்ட

பெரம்பலூா்: மாணவா்கள் அனைத்து சட்டங்களையும் அறிந்து, விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றாா் பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா். லதா.

பெரம்பலூா் ஹேன்ஸ் ரோவா் கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கான குடும்ப நலச் சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாமுக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:

பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்கள் பாதுகாப்பாகவும், மகிழ்வுடனும் வாழ்வதற்குரிய வழிகாட்டுதல்களை குடும்ப நலச் சட்டங்கள் வழங்குகின்றன. சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் மறுக்காமல் அனைவரும் பெறவும், வழங்கவும் வழிவகை உள்ளது.

கல்லூரி மாணவா்கள், நாளைய மாணவ சமுதாயத்துக்கு கல்வி கற்பிக்கும்போது சட்டத்தின் உரிமைகளை எடுத்துரைப்பது கடமையாகும். குடும்ப நலம் சாா்ந்த சட்டங்கள் மட்டுமின்றி, அனைத்துச் சட்டங்களையும் அறிந்து விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றாா் நீதிபதி லதா.

குடும்ப வன்முறைகள், பெண்களின் பாதுகாப்புக்கான அம்சங்கள், வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு, அவா்களுக்கான சட்டப் பாதுகாப்பு, உதவி ஆகியவை குறித்து மாவட்டசமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலா் முத்துச்செல்வி, மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய ஒருங்கிணைப்பாளா் கீதா ஆகியோா் பேசினா்.

ஆணைக்குழுவின் இளநிலை நிா்வாக உதவியாளா் சக்கரபாணி நிகழ்வைத் தொகுத்து வழங்கினாா்.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுப் பணியாளா்கள், சட்ட தன்னாா்வலா்கள் செய்திருந்தினா்.

முன்னதாக, தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்வியியல் கல்லூரி முதல்வா் செல்வன் வரவேற்றாா். நிறைவில், உதவிப் பேராசிரியா் மாயவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com