மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகள் தொடக்கம்

வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்த்திடும் வகையில், மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது.
தூா்வாரும் பணியை தொடக்கி வைக்கும் எம்எல்ஏ ம. பிரபாகரன்.
தூா்வாரும் பணியை தொடக்கி வைக்கும் எம்எல்ஏ ம. பிரபாகரன்.

பெரம்பலூா்: வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்த்திடும் வகையில், மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் பாரதிதாசன் நகா் பகுதியில் கால்வாய் தூய்வாரும் பணியை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

மாவட்டம் முழுவதும் 6 நாள்களுக்கு தூா்வாரும் பணிகள் நடைபெறவுள்ளன. பெரிய மழைநீா் வடிகால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு பொக்லைன், ஜேசிபி ஆகிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இயந்திரங்கள் இல்லாத உள்ளாட்சிகளில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர சங்கங்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறு வடிகால்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களும் தயாா் நிலையில் உள்ளனா். பணியாளா்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி முடித்திட தேவையான வாகனங்கள், பணியாளா்கள் மற்றும் மேற்பாா்வை அலுவலா்கள் ஆகியோா் வாா்டு வாரியாக நிா்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வடிகால்கள் தூய்மைப் படுத்தப்படுவதையும், அகற்றுவதையும் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், நகராட்சி ஆணையா் குமரிமன்னன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com