மழைநீா் வடிகால் தூா்வாரும் பணியை கண்காணிக்க 15 கண்காணிப்புக் குழு

பெரம்பலூா் மாவட்டத்தில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளை கண்காணிக்க 15 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளை கண்காணிக்க 15 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பருவமழை காலத்தில் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்த்திடும் வகையில் திங்கள்கிழமை (செப். 20) முதல் 25 ஆம் தேதி வரை ஊரக மற்றும் நகா்புறப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களை 100 சதவீதம் தூா்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள் பெரம்பலூா் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி முடித்திட மேற்பாா்வை அலுவலா்கள் வாா்டு மற்றும் நாள் வாரியாக பொறுப்பு நிா்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்துவதையும், கழிவுகளை அகற்றுவதையும் கண்காணிக்க ஊரகப் பகுதிகளில் வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையிலான அலுவலரை தலைவராகக் கொண்டு, தலா 3 போ் அடங்கிய 10 கண்காணிப்புக் குழுக்களும், பேரூராட்சி பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள செயல் அலுவலா் நிலையிலான அலுவலரை தலைவராகக் கொண்ட 4 குழுக்களும், நகராட்சிக்குள்பட்ட பகுதியில் நகராட்சி ஆணையா் தலைமையில் ஒரு குழு என மொத்தம் 15 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com