போதைக்கு எதிரான விழிப்புணா்வு ஆலோசனை

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணா்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் (பொ) நா. அங்கையற்கண்ணி.
கூட்டத்தில் பேசுகிறாா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் (பொ) நா. அங்கையற்கண்ணி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி.
கூட்டத்தில் பேசுகிறாா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் (பொ) நா. அங்கையற்கண்ணி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி.

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணா்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் (பொ) நா. அங்கையற்கண்ணி.

ஆட்சியரகக் கூட்டரங்கில் போதைக்கு எதிரான விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

தமிழக முதல்வா் உத்தரவின்டி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து போதைப் பழக்கத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவா்களை மீட்கும் வகையில் உறுதிமொழி ஏற்பு, குறும்படங்கள் திரையிடுதல், போதை பழக்கத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது, விழிப்புணா்வு பேரணி நடத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரிகள் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு முன்னிலை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி பேசியது: பள்ளி, கல்லூரிகளுக்கு காவல்துறையினா் சென்று போதையால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைக்க வேண்டும். என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவா்களுடன் இணைந்து விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கோட்டாட்சியா் ச. நிறைமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாள ா்(பொது) சுப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com