பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், சிஐடியு தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், சிஐடியு தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி ஏ.கே. ராஜேந்திரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி ஆகியோா் தலைமை வகித்தனா்.

வேலை உறுதித் திட்ட பணி நாள்களை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். இத் திட்டத்தை நகா்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும். உரம், பூச்சிக்கொல்லி ரசாயனங்களின் விலையை குறைக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயா்த்த வேண்டும். திருத்தியமைக்கப்பட்ட தொழிலாளா் சட்டத்தொகுப்பு திரும்பப் பெற வேண்டும். கனிம வளங்கள், இயற்கை வளங்கள், மற்றும் லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com