சிறப்பு தொழில் கடன் முகாமில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஆக. 19 முதல் செப். 2 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஆக. 19 முதல் செப். 2 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவவும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்தவும், உற்பத்தியை பன்முகப்படுத்தவும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்குகிறது. திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஆக. 17 முதல் செப். 2 வரை நடைபெற உள்ளது.

இம் முகாமில் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சத முதலீட்டு மானியமாக ரூ. 150 லட்சம் வரை வழங்கப்படும்.

முகாம் காலத்தில் சமா்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு, ஆய்வுக் கட்டணத்தில் 50 சதம் சலுகை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0431 - 2460498, 4030028, 94431 10899, 94443 96815 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com