சின்ன வெண்மணி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை

சின்னவெண்மணி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

சின்னவெண்மணி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சின்னவெண்மணி கிராமத்தில் புதிதாகத் தொடக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (எஸ்சிவிடி பாடத் திட்டத்தில்)  இணையதளம் மூலம் கடந்த 1 ஆம் தேதி முதல் டிச. 30 வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

2 ஆண்டுகள் தொழிற்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் எஸ்எஸ்எல்சி தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மின்சாரப் பணியாளா், பொருத்துநா் தலா 20 இடங்களும், கட்டட பட வரைவாளா் 24 இடங்களும், ஓராண்டு தொழிற்பிரிவான தையல் தொழில்நுட்பப் பிரிவில் 40 இடங்களும் உள்ளன. இவற்றில் சேர குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுள்ளோா் தங்களது மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 4 புகைப்படங்களுடன் வர வேண்டும். சோ்க்கை கட்டணமாக ஓராண்டு தொழிற்பிரிவுக்கு ரூ.185, 2 ஆண்டு தொழில் பிரிவுக்கு ரூ. 195 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94990-55881, 90479-49366 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com