சைபா் குற்றங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையப் பகுதியில், சைபா் குற்றங்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையப் பகுதியில், சைபா் குற்றங்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சைபா் கிரைம் காவல் உதவி ஆய்வாளா் எஸ். மனோஜ் தலைமையிலான போலீஸாா், இணையம் வழியாக நிகழும் குற்றங்களான ஏடிஎம் அட்டையை பயன்படுத்துவது, வங்கி விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது, வேலை வாங்கித் தருவது, கடன் வழங்கும் செயலிகள், ஆபாச விடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், அயல்நாடு வேலைக்குச் செல்வது, கைபேசி டவா் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் வா்த்தகம், வங்கிகளில் பணம் செலுத்தும் முறை, பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபா் கிரைம் உதவி எண் 155260- க்கு தகவல் அளிப்பது, ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் எவ்வாறு புகாா் அளிப்பது என்பது குறித்து விளக்கிக் கூறினா்.

இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com