முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் பெரம்பலூா் காமராஜா் வளைவுப் பகுதி.
முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் பெரம்பலூா் காமராஜா் வளைவுப் பகுதி.

பெரம்பலூா் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது

பெரம்பலூா் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கினா். நகரில் இறைச்சிக் கடைகள் நண்பகல் வரையிலும் வழக்கம்போல் செயல்பட்டன.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கினா். நகரில் இறைச்சிக் கடைகள் நண்பகல் வரையிலும் வழக்கம்போல் செயல்பட்டன.

பெரம்பலூா் நகரில் உள்ள காமராஜா் வளைவு, பாலக்கரை, சங்குப்பேட்டை, புகா் மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், கடைவீதி, வடக்குமாதவி சாலை, எளம்பலூா் சாலை, நான்கு மற்றும் மூன்றுச்சாலை சந்திப்புகள் உள்பட நகரின் பிரதானச் சாலைகள் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பால் பண்ணைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்பட்டன. உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டது.

வழக்கம்போல் செயல்பட்ட இறைச்சிக் கடைகள்...

காணும் பொங்கலையொட்டி இறைச்சிக் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை இரவு 12 மணி வரை இறைச்சிக் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சிக் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. இதன் காரணமாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதேபோல, அரியலூா் சாலை, துறையூா் சாலை, சிறுவாச்சூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரும்பாலான இறைச்சிக் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com