வாலிகண்டபுரம் அரசுப் பள்ளியில் நோய்கள் தடுப்பு தின விழிப்புணா்வு

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

வாலிகண்டபுரம் வட்டார தேசியப் பள்ளி சிறாா் நலவாழ்வுத் திட்ட மருத்துவ அலுவலா் ஜே. திருநாவுக்கரசு நிகழ்வுக்குத் தலைமை வகித்து, விலங்குகள் மற்றும் பறவைகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கவுரை ஆற்றினாா்.

மாவட்ட சுகாதாரத்துறை உதவி இயக்குநரின் நோ்முக உதவியாளா் இளங்கோவன், உடல்நலக் கல்வியாளா் செல்லபாண்டியன், சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் பறவைகளால் நோய்கள் பரவும் முறை, அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

தொடா்ந்து, தேசிய விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இருபால் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியா் க. செல்வராசு வரவேற்றாா். நிறைவில், உதவித் தலைமையாசிரியா் வெ. வீரையன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com