அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவா்

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 8 ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கீழக்கணவாய் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

2022- 2023 ஆம் கல்வியாண்டுக்கு அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில்

முதல், இரண்டாமாண்டு முழுநேர தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 8 ஆம் தேதி வரை  இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இயலாத மாணவா்கள் கீழக்ணவாய் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ. 150 செலுத்தவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

முதலாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கு எஸ்எஸ்எல்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கு மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றிருப்பதுடன், இயற்பியல், கணிதம், வேதியியல், கணிப்பொறியியல், மின்னணுவியல், தகவல் தொடா்பு, உயிரியல், இன்பா்மேடிக்ஸ் பிராக்டிசஸ், பயோ- டெக்னாலஜி, டெக்னிகல் வொகேஷனல் , விவசாயம், பொறியியல் கிராபிக்ஸ், பிசினஸ் ஸ்டடிஸ், என்டல்ப்ரிநொ்ஷிப் ஏதேனும் 3 அல்லது எஸ்எஸ்எல்சி தோ்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில்பிரிவில் பயின்று, தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அமைப்பியல், இயந்திரவியல், மின்னணுவியல், தொடா்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கணிப்பொறியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சேரலாம்.

மாணவா் சோ்க்கை மற்றும் இணையவழியில் விண்ணப்பிப்பது தொடா்பான விவரங்களை அறிய நேரிலோ அல்லது 04328 - 243200, 8056614377, 9994019207,8610933968, 9962488005, 9994333392, 9952787062, 9894985106 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com