பாளையத்தில் முளைப்பாரி ஊா்வலம்

பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாளையம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.
பாளையம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.

பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா மே 8-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடா்ந்து மே 20,21,22 ஆகிய தேதிகளில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம், பால்குடம் எடுத்தலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, பிரதான வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று அம்மனை வழிபட்டனா். இரவு அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

தொடா்ந்து, திங்கள்கிழமை தீ மிதித்தல், அலகு குத்துதல் மற்றும் அம்மன் வீதியுலாவும்,

24- ஆம் தேதி காலை 9 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது. 25 ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை மகா மாரியம்மன் திருக்கோயில் பிரமுகா்கள், பொதுமக்கள், இளைஞா் மன்றத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com