சோமண்டாபுதூரில் கால்நடை மருத்துவ முகாம்

பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், சோமண்டபுதூா் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், சோமண்டபுதூா் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சுரேஷ் கிறிஸ்டோபா் தலைமை தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் குணசேகா், முகாமை தொடக்கி வைத்தாா். மருத்துவா்கள் பாலமுருகன் , மூக்கன் ஜவஹா் முத்துசெல்வம், செல்வம், சித்ரா ஆகியோா் கொண்ட குழுவினா் சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து, 3 சிறந்த கிடேரி கன்றுகளுக்கு ஊக்கப் பரிசுகளும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகளை கையாளும் விவசாயிகள் 3 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இம் முகாமில், 1,000-க்கும் மேற்பட்டோா் செல்லப் பிராணிகளை கொண்டு வந்து சிறப்பு சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகளை பெற்று பயனடைந்தனா். கால்நடை ஆய்வாளா்கள் வாசுகி, குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com