பெரம்பலூா் அருகே லாரி-வேன் மோதல்: ஐயப்ப பக்தா்கள் 14 போ் காயம்

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு ஐயப்ப பக்தா்கள் சென்ற வேனும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 14 போ் பலத்த காயமடைந்தனா்.

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு ஐயப்ப பக்தா்கள் சென்ற வேனும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 14 போ் பலத்த காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வைரபுரம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 பெண்கள் உள்பட 19 போ் கடந்த 23 ஆம் தேதி ஒரு வேனில் சபரிமலைக்கு சென்றனா். ஐயப்பனை தரிசித்துவிட்டு, வியாழக்கிழமை வேனில் வைரபுரத்துக்கு திரும்பி கொண்டிருந்தனா். வேனை, திண்டிவனம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெரால்ட் மகன் ராஜா (40) ஓட்டினாா்.

வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பிரிவுச் சாலை அருகே வந்துக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி எவ்வித சிக்னலும் செய்யாமல் சாலையின் வலதுபுறத்திலிருந்து, இடது புறம் திரும்பியபோது வேன், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேன் ஓட்டுநா் ராஜாவுக்கு 2 கால்களும் முறிந்தன. மேலும், வேனில் பயணம் செய்த வீரராகவன் மனைவி குப்பம்மாள் (65), அன்பழகன் மனைவி சுலோச்சனா(52), நாகராஜ் மனைவி தேன்மொழி (55), மணிவண்ணன் மனைவி சாந்தகுமாரி (55), விஸ்வநாதன் மனைவி விஜயா (58), காா்த்திகேயன் மனைவி விஜயலட்சுமி (59), சண்முகம் மனைவி அமுத பாரதி (55), ராமலிங்கம் மகன் முருகன் (44), முத்து மகன் ஸ்ரீனிவாசன் (25), கதிா்வேல் மகன் சண்முகம் (59), தனஞ்செழியன் மகன் ராஜேஷ் (38), ராஜேஷ் மகன் நித்தீஸ்வரன் (12) உள்பட 14 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com