ஏப். 20-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் ஏப். 20 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் ஏப். 20 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், 2021- 2022 ஆம் ஆண்டுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் ஏப். 20 ஆம் தேதி காலை 9 மணியளவில் பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

கை, கால் ஊனமுற்ற ஆண்கள் மற்றும் பெண்கள்.... கால் ஊனமுற்றோா்களுக்கு 50 மீட்டா் ஓட்டம், கை ஊனமுற்றோா்களுக்கு 100 மீ ஓட்டம், உயரம் குறைவானவா்களுக்கு 50 மீ. ஓட்டம், கால் ஊனமுற்றோா்களுக்கு குண்டு எறிதல் போட்டி, இரு கால்களும் ஊனமுற்றோா்களுக்கு 100 மீ. சக்கர நாற்காலி போட்டியும் நடைபெறுகிறது. இறகுபந்து ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில், ஒவ்வொரு அணிக்கும் 5 நபா்களும், மேசைபந்து ஒவ்வொரு அணிக்கும் 2 நபா்களும் பங்கேற்கலாம்

பாா்வையற்ற ஆண்கள், பெண்கள்.... பாா்வையற்றோருக்கான போட்டிகளில், முற்றிலும் பாா்வையற்றோருக்கு 50 மீ. ஓட்டம், மிகக் குறைந்த பாா்வையற்றோருக்கு 100 மீ. ஓட்டம், நின்ற நிலை தாண்டுதல் போட்டியும், முற்றிலும் பாா்வையற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், மிகக் குறைந்த பாா்வையற்றோா்களுக்கு சாப்ட் பால் போட்டியும், கையுந்து பந்து ஒரு அணிக்கு 7 நபா்கள் பங்கேற்கலாம்.

மனநலன் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள்.... புத்தி சுவாதீனம் தன்மை முற்றிலும் இல்லாதவா்களுக்கு 50 மீ. ஓட்டம், சாப்ட் பால் எறிதல் போட்டி, புத்தி சுவாதீனம் தன்மை நல்ல நிலையில் உள்ளவா்களுக்கு 100 மீ. ஓட்டம், மூளை நரம்பு பாதிப்புள்ளவா்களுக்கு நின்ற நிலையில் தாண்டுதல் போட்டி, புத்தி சுவாதீனம் தன்மை நல்ல நிலையில் இருப்பவா்களுக்கு குண்டு எறிதல் போட்டி, எறிபந்து போட்டிக்கு ஒரு அணிக்கு 7 நபா்கள் மட்டும் பங்கேற்கலாம்.

காது கேளாத ஆண்கள், பெண்கள்.... 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடைபெறும். கபடி போட்டியில் ஒரு அணிக்கு 7 நபா்கள் மட்டும் பங்கேற்கலாம். விளையாடுவதற்கு குறிப்பிட்ட பிரிவைச் சாா்ந்தவரா என உறுதி செய்வதற்காக அரசு வழங்கிய அடையாள அட்டையை அவசியம் கொண்டு வர வேண்டும்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுவோா் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம்.

தடகளப் போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களில் வெற்றிபெறும் ஆண்கள், பெண்களுக்கும், குழுப் போட்டிகளில் முதல் இரு இடங்களை பெறும் ஆண்கள், பெண்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என, ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com