வேளாண் அறிவியல் மையத்தில் உழவா் விழா

பெரம்பலூா் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் உழவா் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்: பெரம்பலூா் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் உழவா் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் நடத்தப்பட்ட விழாவுக்கு, மையத் தலைவா் முனைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன் தலைமை வகித்தாா்.

பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள், புதிய ரகங்கள், எண்ணெய் வித்துப் பயிா்களின் சாகுபடி முறைகள், நுண்ணீா்ப் பாசனம், மத்தியத் திட்டங்கள், பயிா் சுழற்சி முறை சாகுபடி, வேளாண் இயந்திரங்கள், அதற்கான மானியங்கள், நபாா்டு வங்கியின் செயல்பாடுகள், பயிா்க்கடன், சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல் ஆகியவை குறித்து முறையே பருத்தி ஆராய்ச்சி நிலையத் தலைவா் சோமசுந்தரம், மாவட்ட வேளாண் துணை இயக்குநா் பாபு, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் இந்திரா, வேளாண் பொறியியல் துறை அலுவலா் அறிவழகன், நபாா்டு மேலாளா் நவீன்குமாா், ரோவா் வேளாண் கல்லூரிப் பேராசிரியா் வகாப், மாவட்டத் தரக் கட்டுப்பாட்டுத் துறை வேளாண் அலுவலா் சண்முகசுந்தரம் ஆகியோா் பேசினா்.

விழாவில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நீா்ப்பாசனம், உயிரி உரங்கள் உற்பத்தி செய்வது குறித்து தொழில்நுட்ப வல்லுநா்களால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. , வேளாண் இடுபொருள்கள், இயந்திரங்கள், மதிப்புக் கூட்டுப் பொருள்களும் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிறைவில், தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் வி. சங்கீதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com