நெகிழி விழிப்புணா்வுப் பிரசாரம்
By DIN | Published On : 06th June 2022 02:09 AM | Last Updated : 06th June 2022 02:09 AM | அ+அ அ- |

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, புஞ்சைப்புகளூரில் நெகிழி விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த பிரசாரத்துக்கு நகராட்சித் தலைவா் நொய்யல் சேகா் என்கிற குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் பிரதாபன், ஆணையா் கனிராஜ், நகராட்சி உறுப்பினா்கள் மற்றும் பணியாளா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழிப் பயன்பாடு மற்றும் விற்பனை ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து கொடுப்பதன் செயலாக்கம் குறித்து வணிகா்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா் .