முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு
By DIN | Published On : 14th March 2022 04:24 AM | Last Updated : 14th March 2022 04:24 AM | அ+அ அ- |

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாா்ச் 28, 29 ஆம் தேதி அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சாா்பில் நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா், துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு சிஐடியூ மாவட்டச் தலைவா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா்.
தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் குமாா், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ராஜேந்திரன், ஹெச்எம்எஸ் தொழிற்சங்க மாவட்டச் செயலா் சின்னச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மத்திய அரசின் சீரழிவு கொள்கைகளை விளக்கவும், பொது வேலைநிறுத்தத்துக்கு மக்களிடம் ஆதரவு கோரி வரும் 21, 22 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்வது, தெருமுனைக் கூட்டங்கள், ஆலை வாயில் கூட்டங்கள், தொழிலாளா் குடியிருப்புகளில் கூட்டங்கள் நடத்துவது, 22 ஆம் தேதி பொதுமக்கள் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது, 28 ஆம் தேதி பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் மறியல் போராட்டமும், 29 ஆம் தேதி பெரம்பலூா் காந்தி சிலை எதிரே ஆா்ப்பாட்டமும் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.