அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்

பெரம்பலூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற வாகனங்களை, கிராம பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனா்.

பெரம்பலூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற வாகனங்களை, கிராம பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனா்.

பெரம்பலூா் அருகே சத்திரமனை கிராமத்திலுள்ள ஏரியில் வெள்ளிக்கிழமை காலை முதல் டிப்பா் லாரிகளில் கிராவல் மண் ஏற்றி, கொண்டு செல்லப்பட்டது.

இதையறிந்த கிராம பொதுமக்கள் கிராவல் மண் ஏற்றிச் சென்ற வாகன ஓட்டுநா்களிடம் விசாரித்தபோது, ஆட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனராம்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பொதுமக்கள் தரப்பில் கேட்டதற்கு, அவ்வாறு ஏற்றிச் செல்லவில்லை எனக் கூறினாா்களாம்.

இதனால் சந்தேகமடைந்த கிராம பொதுமக்கள் கிராவல் மண் ஏற்றிச் செல்ல முயன்ற வாகனங்களை சிறைபிடித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வருவாய்த் துறையினா் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, பெரம்பலூா் வட்டாட்சியரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்காக கிராவல் மண் ஏற்றிச் செல்வதாக கூறினா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கிராம மக்கள், விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்துச்செல்ல  பல்வேறு ஆவணங்களை கேட்கும் அலுவலா்கள், அரசு சாா்ந்த பணிகளுக்காக உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் ஏற்றிச் செல்வது எவ்விதத்தில் முறையாகும் என கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com