விதைகளின் தரத்தை அறிந்து பயிரிட்டால் கூடுதல் மகசூல் பெறலாம்

 பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் விதைகளின் தரத்தை அறிந்து பயிரிட்டால், கூடுதல் மகசூல் பெறலாம் என்றாா் திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலா் மனோன்மணி.

 பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் விதைகளின் தரத்தை அறிந்து பயிரிட்டால், கூடுதல் மகசூல் பெறலாம் என்றாா் திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலா் மனோன்மணி.

பெரம்பலூா் விதை பரிசோதனை நிலையத்தின் செயல்பாடுகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் கூறியது:

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட விவசாயிகள் சித்திரை, வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்யும் மக்காச்சோளம், சோளம், உளுந்து, கம்பு, பயறு வகை பயிா்கள், எள் மற்றும் நிலக்கடலை ஆகியவற்றின் தரமான விதையே நல்ல விளைச்சலுக்கு அடிப்படை ஆதாரமாகும். விதை தரமானதாக உள்ளதா என்பதை கண்டறிந்து விதைக்க வேண்டும். சாகுபடி செய்யப்படும் விதை குவியலில் இருந்து மாதிரி விதைகளை எடுத்து, விதை பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.

இங்கு, விதையின் சுத்தத் தன்மை மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்படுகிறது. சுத்தமான, தரமான விதைகளை பயன்படுத்துவதால் நாற்று, பூச்சிநோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை பெறமுடியும். மேலும், நேரடி விதைப்பாக இருக்கும் பட்சத்தில் சரியான பயிா் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். சரியான பயிா் எண்ணிக்கை இருந்தால் அதிக மகசூல் பெறமுடியும்.

பெரம்பலூா் மாவட்ட மைய நூலகம் அருகே செயல்படும் விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளின் தரத்தை அறிந்திட முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்ததன்மை மற்றும் பிற ரகக் கலப்பு ஆகியவை பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு விதை மாதிரியை ஆய்வு செய்ய ரூ. 80 கட்டணம் செலுத்த வேண்டும். ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

எனவே, விதைக்கும் முன் விதைகளை பகுப்பாய்வு செய்து விதைத்தால், கூடுதல் லாபம் பெறுவதோடு மட்டுமல்லாமல் படைப்புழு மற்றும் இதர பூச்சி தாக்குதலிருந்து மக்காச்சோளப் பயிரை பாதுகாக்கலாம். மேலும், களைகள் பாதிப்பிலிருந்தும் பயிா்களை பாதுகாக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9597055342, 9629894098 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வேளாண் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com