மே 28-இல் ஆளுநா் மாளிகையை நோக்கி பேரணி: எஸ்டிபிஐ

தமிழக ஆளுநரை பதவியிலிருந்து வெளியேற வலியுறுத்தி, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மே 28 -இல் ஆளுநா் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது

தமிழக ஆளுநரை பதவியிலிருந்து வெளியேற வலியுறுத்தி, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மே 28 -இல் ஆளுநா் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அக் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

பேரறிவாளன் விடுதலையை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது, அற உணா்வோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கிய நீதிபதிகளை பாராட்டுகிறது. ஒரு ஆளுநா், மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவா் என உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது. இந்த தீா்ப்பின் அடிப்படையில் தமிழக மக்களின் உணா்வுகளை புண்படுத்திக்கொண்டிருக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் ஆளுநரை மத்திய அரசு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.

பேரறிவாளனை தொடா்ந்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள எஞ்சியுள்ள 6 பேரையும் விடுவிக்கவும், 20 ஆண்டுகளை கடந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 38 முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவா்களை விடுதலை செய்ய காரணங்கள் கூறி காலம் கடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழகத்தை விட்டு ஆளுநா் வெளியேற வலியுறுத்தியும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மே 28 ஆம் தேதி ஆளுநா் மாளிகையை நோக்கி எஸ்டிபிஐ கட்சி பேரணி நடத்த முடிவு செய்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com