ஊராட்சித் தலைவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

குன்னம் காவல் எல்லைக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குன்னம் காவல் எல்லைக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குன்னம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இம் முகாமுக்கு தலைமை வகித்த, பெரம்பலூா் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன் பேசியது:

கொத்தடிமைத் தொழிலாளா்கள், தெருவோரம் தங்கியிருக்கும் குழந்தைகள், பள்ளிக்குச் செல்லாமல் இடைநின்ற குழந்தைகள், தந்தையால் தன் குழந்தையை பாலியலுக்குள்படுத்தப்பட்ட நிகழ்வுகள், மதுப் பழக்கத்துக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளா்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் இருப்பது தெரியவந்தால், அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் குழந்தைகளின் விவரங்களை சேகரித்து, மாவட்டக் காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, குன்னம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், ஊராட்சித் தலைவா்கள், காவல்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com