செப். 15, 17-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை மூலம் செப். 15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

தமிழ் வளா்ச்சித் துறை மூலம் செப். 15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், அண்ணா பிறந்த நாளான செப். 15 ஆம் தேதி, பெரியாா் ஈவெரா பிறந்த நாளான செப். 17 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளது. இப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக முறையே ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்பட உள்ளது.

மேலும், பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 போ் தோ்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசாக தலா ரூ. 2,000 வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவா்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கும் போட்டிகள் தொடங்கும்.

கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இயக்குநா் மூலம், அந்தந்தக் கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மைக்கல்வி அலுவலா் மூலம், அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதிப் பெற்று பங்கேற்கலாம்.

பள்ளி மாணவா்களுக்கு அண்ணா பிறந்த நாளன்று தாய் மண்ணிற்கு பெயா் சூட்டிய தனயன், மாணவருக்கு அண்ணா, அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஆகிய தலைப்புகளிலும், தந்தை பெரியாா் பிறந்த நாளன்று தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும்- தமிழ்ச் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள், தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும்- பெண் விடுதலையும் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும்.

கல்லூரி மாணவா்களுக்கு அண்ணா பிறந்த நாளன்று பேரறிஞா் அண்ணாவும்- தமிழக மறுமலா்ச்சியும், பேரறிஞா் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச் சுவட்டில், தம்பி மக்களிடம் செல் ஆகிய தலைப்புகளிலும், தந்தை பெரியாா் பிறந்த நாளன்று தந்தை பெரியாரும்- பெண் விடுதலையும், தந்தை பெரியாரும்- மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள், இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியாா், உலக சிந்தனையாளரும்- பெரியாரும் ஆகிய தலைப்புகளிலும் போட்டி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com